தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம்: முதல்வருக்கு கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் கலை இலக்கிய மன்றம் மற்றும் அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம் தில் ரூபாசண்முகம் தலைமையில் நடந்தது.இதில், சென்னையில் பாகவதருக்கு எந்த நினைவுச் சின்னமும் இல்லை, ஆகையால் அவர் வாழ்ந்த புரசைவாக்கம், அடையாறு,தி.நகர் பகுதியிலோ அல்லது கோடம்பாக்கம் நெடுஞ்சாலைக்கோ அவரது பெயரை வைக்க வேண்டுமென்றும்,
சிறுவயது முதல் பாகவதர் வாழ்ந்த மூதாயைர் வீடு திருச்சி பாலக்கரையில் உள்ளது. அந்த வீட்டை நினைவில்லம் ஆக்கவேண்டும், மற்றும் பாகவதருக்கு மணி மண்டபம், சிலை எழுப்ப வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது சம்பந்தமான எங்களது வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொண்டது.












Click it and Unblock the Notifications