வன ஊழியர் கொலை வழக்கு: வீரப்பன் ஆதரவாளர்கள் 9 பேர் விடுதலை
தர்மபுரி:
வீரப்பன் பெயரைப் பயன்படுத்தி, வன ஊழியர்கள் 3 பேரைக் கடத்திக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரையும்விடுவித்து தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓகேனக்கல் வனச்சரகத்தில் பணியாற்றி வந்த அபிமன்யூ, மகாதேவன் என்ற சின்னப் பையன், பழனி ஆகிய 3 வனக்காவலர்களும் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி சிலரால் கடத்தப்பட்டனர்.இவர்களை வீரப்பன் கும்பல் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ. 3 கோடி கொடுத்தால் விட்டு விடுவதாகவும் தர்மபுரி மற்றும் ஈரோடுமாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் அரசுத் தரப்பில் இதுதொடர்பாக பதில் ஏதும் அனுப்பப்படாததால், கடத்தப்பட்ட 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அவர்களது பாதி எரிந்த உடல் பின்னர் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணாகரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
தீவிர விசாரணை நடத்தி மகேந்திரன், கோவிந்தன், அர்த்தநாரி, துரை, அம்மாசி, பார்த்திபன், பெரிய பையன், ஏமக்குட்டி, நல்லதம்பி, இளையராஜா, சரவணன், பசவன் என்ற மணி என்ற லட்சுமணன் ஆகிய 12 பேரைக் கைது செய்தனர்.
வழக்கு விசாரணையில் இருந்த போது, கோவிந்தன், அம்மாசி ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்த போது இறந்து விட்டனர்.மற்றவர்கள் மீது தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன்நிரூபிக்கப்படவில்லை என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications