30ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 30ம் தேதி கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் கூடுகிறது.
திமுக மாநில மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க திமுகவில் தீவிரஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்கு முன்பாக வரும் மாநில மாநாடு என்பதால் இந்த மாநாடு திமுகவினர் மத்தியில்பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.மாநாட்டை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே ஒருமுறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதிநடத்தியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் வருகிற 30ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிதலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 30ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
திருச்சி மாநில மாநாடு மற்றும் கட்சிப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
