கூட்டணியில் கலகம் ஏற்படுத்த வஞ்சக வலை: கருணாநிதி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்தி, கூட்டணியைப் பிளவுபடுத்த உளவுத்துறை மூலம் ஆட்சியாளர்கள் வஞ்சக வலைபின்னியுள்ளார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதிலில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டதாகவும், எந்தக் கட்சிக்கு எத்தனை இடம் என்று முடிவாகி விட்டதாகவும் ஒரு வதந்தியைப் பரப்புகிறார்கள்.

இது கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்தி, கூட்டணியை உடைக்க உளவுத்துறை மூலம் ஆட்சியாளர்கள் பின்னும் வஞ்சகவலையாகும்.

ஆளுநரை நேரில் சந்தித்தது குற்றமா என்பதை அரசியல் சட்டம் தான் சொல்ல வேண்டும். அவரை சந்தித்ததற்கு என் மீதுஉரிமை மீறல் பிரச்சினை என்றால், அவரை அவையில் கடுமையாக விமர்சனம் செய்ததற்காக யார் மீது என்ன நடவடிக்கைஎடுப்பது?

திமுகவினர் நிதியே தருவதில்லை என்பது போல ஒரு நடிகர் பேசியிருக்கிறார். வாக்களித்தபடி வழங்காதவர்களின் நாக்குஎப்படியும் வளையும். வேண்டுமானால் அந்த வாக்களிப்புகளை வரிசைப்படுத்தி பாருங்கள், அந்தப் பொய்யர்களின் சாயம்வெளுக்கும், வேடம் கலையும். என் செய்வது, ஏமாற்றுவதற்கு இன்னும் சிலர் தயாராகத் தானே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+