தமிழக தேர்தல் ஆணையர் பதவி நீட்டிப்பை வாபஸ் பெற அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை
சென்னை:
தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டுள்ள பதவி நீட்டிப்பை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் மாநில தேர்தல் ஆணையருக்கு உள்ளது. தமிழக தேர்தல் ஆணையராகபழனிச்சாமி பதவி வகித்து வருகிறார். இவரது முறையான பதவிக்காலம் முடிந்தும், இதுவரை இரண்டு முறை இவருக்குபதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பதவி நீட்டிப்பை எதிர்த்து சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், பழனிச்சாமிக்கு 2 முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச ஓய்வு வயதான 62 வயதை அவர் தாண்டி விட்டார். இந்த நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வேண்டும்என்பதற்காகவே, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது சட்டவிரோதமாகும்.
எனவே இந்த பதவி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, இந்த பதவி நீட்டிப்பு சரியானதாக தெரியவில்லை. எந்தப் பதவியாகஇருந்தாலும் ஓய்வு பெறுவதற்கென்று வயது வரம்பு இருக்கும். ஆனால் வயது வரம்பே இல்லாமல் செய்யும் வகையில் இந்தபதவி நீட்டிப்பும், சட்டத் திருத்தமும் உள்ளது.
வரம்பில்லாத முறையில் பதவி நீட்டிப்பு கொடுத்தது தவறு. எனவே இந்த பதவி நீட்டிப்பு உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதி ஷா யோசனை தெரிவித்தார். இருப்பினும் இதை மறுத்துப் பேசியதலைமை வழக்கறிஞர், இந்த வழக்கு சட்டத் திருத்தம் குறித்துத்தான் தொடரப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தத்தில் எந்த தவறும் இல்லை. பதவி நீட்டிப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானதும் அல்ல. மாநில தேர்தல்அதிகாரியின் வயது வரம்பை 62லிருந்து 65 ஆக உயர்த்தும் நோக்கத்துடன் தான் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
புனே, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த அகில இந்திய தேர்தல் ஆணையர்கள் மாநாட்டின் போதுமாநிலத்திற்கு மாநிலம் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் வேறுபடுவதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதை ஒரே சீராகவும் மாற்ற யோசனை தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மாநில தேர்தல் அதிகாரியின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் தான் பழனிச்சாமிக்கு பதவிநீட்டிப்பு கொடுக்கப்பட்டது.
2 முறை மட்டும் பதவியை நீடித்தால் தேர்தலை நடத்த முடியாது. எனவே தான் வயது வரம்பை நீக்கினோம். வயது வரம்பைநிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே அரசியல் சாசனம் விட்டுள்ளது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் வயது வரம்பு நீக்கப்பட்டது என்றார். இதைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 2ம் தேதிக்குவிசாரணை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications