பிகார், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸாவில் நக்ஸல்கள் வெறியாட்டம்: ரயில் நிலையம்-பாலங்கள் தகர்ப்பு

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், பிகாரில் நக்ஸலைட்டுகள் பயங்கரதாக்குதல்களை நடத்தினர்.

ரயில் நிலையங்களையும், தண்டவாளங்களையும் குண்டு வைத்து தகர்த்த நக்ஸல்கள் ஒரு ரயில் நிலைய அதிகாரியைக் கடத்திச்சென்றனர்.

ஜார்க்கண்டில் நக்ஸல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்த நக்ஸல்கள், ஒரிஸ்ஸாவில் பல இடங்களில் சாலைகளில் டயர்களைபோட்டு எரித்தும் பெரிய மரங்களை வெட்டிப் போட்டும் தடுப்புகளை ஏற்படுத்தினர். லாரியை தீ வைத்து எரித்தனர்.

இத் தகவலை போலீசுக்குத் தெரிவிக்க முயன்றவர்ளை ஆண், பெண் நகஸல்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.

ஜார்க்கண்டின் மேற்குப் பகுதியில் புஸாதியா என்ற ரயில் நிலையத்தை நக்ஸல்கள் நள்ளிரவில் தாக்கினர். அவர்களை ரயில்வேபாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில், ஒரு வீரர் கொல்லப்பட்டார்.

பிகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களை நக்ஸலைட்டுகள் வெடிகுண்டு வைத்துதகர்த்தனர். இதனால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பிகார், மேற்கு வங்கம் செல்லும் ரயில்களின் போக்குவரத்து முற்றிலுமாகதுண்டிக்கப்பட்டது.

கயாவில் ஜமுயாவா என்ற ரயில் நிலையத்தை நக்ஸல்களை சூறையாடினர். ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை உடைத்துஎறிந்து அதிகாரியைக் கடத்திச் சென்றனர்.

மேலும் அந்த மாவட்டத்தில் ரயில் பாலங்கள், சாலைப் பாலங்களையும் குண்டு வைத்து தகர்த்தனர். பல ரயில் நிலையங்கள் மீதும்குண்டுகளை வீசினர். பிகாரில் பல இடங்களில் போலீஸ் கண்காணிப்பு முகாம்கள் மீதும் குண்டுகளை வீசி போலீசாரின்ஆயுதங்களை பறித்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+