தரம்சிங் ஆட்சி: இப் படம் இன்றே கடைசி!!
பெங்களூர்:
கர்நாடகத்தில் தரம்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புநடக்கிறது.
எந்த நம்பிக்கையும் இல்லாமல் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கப் போகும் தரம்சிங் அரசைக் காக்க காங்கிரஸ்தலைமை திடீர் பல்டி அடித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தைப் போல ஆட்சியையும் அதிகாரத்தையும் சம அளவில்குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று இன்று காலையில் அறிவித்தது.நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் சட்டமன்றம் கூடுவதற்கு சிறிதுநேரத்துக்கு முன் இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.
இந் நிலையில் இன்று தரம்சிங் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார். ஆனால், நம்பிக்கைத் தீர்மானத்தை இதுவரை (மாலைவரை) அவர் தாக்கல் செய்யவில்லை. இரவில் அந்தத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
இந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் அவர் தோற்றால் பாஜக-தேவே கெளடாவின் மகன் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்றஜனதா தளம் ஆகியவை நாளையே கூட்டணி அரசை அமைக்கும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டணியின் சார்பில் குமாரசாமிமுதல்வராகிறார்.
முன்னதாக கட்சியை உடைத்த குமாரசாமியை மனம் மாறச் செய்யவும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர்க்கவும் தேவேகெளடா முயன்றார். குமாரசாமியை மனம் மாறச் செய்வதற்காக அவரைத் சந்தித்த தேவே கெளடா மனம் மாறிவிட்டார்.
காங்கிரஸ் கட்சி என்னை இழிவுபடுத்தியதால் தான் தனது மகன் தரம்சிங் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றதாக சொன்ன கெளடா,அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி ஏற்படுவதைத் தவிர்க்கப் போவதாகக் கூறினார்.
கெளடாவும் அவரது மகனும் சேர்ந்து நாடகம் நடத்துவதாகக் கருதப்படும் நிலையில், கெளடாவை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இரு முறையும் பேச்சு தோல்வியடைந்தது. காரணம், காஷ்மீர், மாநிலத்தைப் போலஆட்சியையும் முதல்வர் பதவியையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளவும், தனது மகனை முதல்வராக்கவும் கோரினார் கெளடா.அதை சோனியா ஏற்கவில்லை.
இதையடுத்து நேற்று இறுதிக் கட்டமாக குமாரசாமி கட்டுப்பாட்டில் இருக்கும் எம்எல்ஏக்களை சந்தித்தார் கெளடா. அவர்களிடம்பாஜகவுக்கு ஆதரவு தந்தால், மதசார்பற்ற ஜனதா தளம் என்ற நம் கட்சியின் பெயருக்கு அர்த்தமில்லாமல் போய்விடும், வரும்தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டி வரும் எனப் பேசிப் பார்த்தார் கெளடா.
ஆனால், அதை எம்எல்ஏக்கள் பலரும் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில்மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் கெளடா.
இந் நிலையில் இன்று குமாரசாமி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில்மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அனைவரும் தரம்சிங் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் தரம்சிங்குக்கு ஆதரவாகத் தான் வாக்களிக்க வேண்டும் என கெளடா சார்பில் எந்த உத்தரவும்பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் குமாரசாமி தரப்புடன் ஆட்சி அதிகாரத்தை சமமமாகப் பிரித்துக் கொள்ள மகாராஷ்டிர மாடலை ஏற்கத் தயார்என பெங்களூரில் முகாமிட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் பார்வையாளர் ஏ.கே.ஆண்டனி மூலமாக காங்கிரஸ் தலைமை இன்றுஅதிரடியாக வெளியிட்டுள்ளது.
இந்த மாடலின்படி முதல்வர் பதவி காங்கிரஸ் வசமே இருக்கும். அதே நேரத்தில் மிக முக்கியமான துறைகளான உள்துறை,நீர்பாசனத் துறை ஆகியவை குமாரசாமி தரப்புக்கு வழங்கப்படும்.
ஆனால், முதல்வர் பதவியை குறி வைத்துள்ள குமாரசாமி காங்கிரசின் இந்த துக்கடா அறிவிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே இன்று காலை கூடிய கர்நாடக சட்டசபையில் மாலைக்கு மேல் தான் வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. வாக்கெடுப்பில்தோல்வி உறுதி என்பதால் வாக்கெடுப்புக்கு முன்பே தரம்சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது.
இந் நிலையில் கடைசி கட்ட முயற்சியாக தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு தேவே கெளடா தனித்தனியே கடிதம்அனுப்பியுள்ளார். அதில் நமது கட்சியின் மதசார்பற்ற தன்மையைக் கட்டிக் காக்கும் வகையில் பாஜகவுடன் கைகோர்க்கும்திட்டத்தை நீங்கள் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடைசி கட்டமாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேகெளடா மாலையில் அறிவித்துவிட்டார். கெளடாவின் இந்த அறிவிப்பு அவரது கட்சியின் எம்எல்ஏக்களையும் மகன்குமாரசாமியையும் மனம் மாற்றுவது சந்தேகமே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications