நுழைவுத் தேர்வு ரத்து: சட்டம் நிறைவேறியது
சென்னை:
தமிழகத்தில் பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் இன்று எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன் வடிவின் மீது சட்டமன்றத்தில் இன்று விவாதம் நடந்தது. அதன் விவரம்:புகழேந்தி (திமுக):
நுழைவுத் தேர்வு ரத்தாவதை திமுக வரவேற்கிறது. அதே நேரத்தில் குறையில்லாமல் இதைக் கொண்டு வர வேண்டும். நாளையாராவது நீதிமன்றம் சென்றால் சட்டம் பயனில்லாமல் போய்விடும். இந்த சட்டத்தை உண்மையான நோக்கத்துக்காக கொண்டுவரவில்லை என்றார்.
ஞானசேகரன் (காங்):
நுழைவுத் தேர்வு ரத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. தொழிற் கல்விக்கு மாணவ, மாணவிகளை சேர்க்கும்போது தமிழ் வழிபயின்றவர்களுக்கு அல்லது தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில்சட்டத்தில் அளவு கோல் வைக்க வேண்டும்.
ஜி.கே. மணி (பாமக):
நுழைவுத் தேர்வு ரத்தாவதை வரவேற்கிறோம். அதே சமயத்தில் பல மாணவர்கள் சமமான மதிப்பெண்கள் எடுத்திருந்தால் பிஇ,எம்பிபிஎஸ் வகுப்புகளில் சேர, தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். தமிழ்ப் பாடத்தில் அதிகமார்க் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரலாம்.
இப்படி சில முன்னுரிமைகளை, அளவுகோல்களை வைத்து கிராமப் பகுதி மாணவர்களை அரசு காப்பாற்ற வேண்டும்.அவர்களுக்கும் தொழிற் கல்வி வாய்ப்பு போய்ச் சேர வேண்டும்.
கல்வி அமைச்சர் சண்முகம்:
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தினோம். அதை மத்திய அரசு செய்யாததால்மாநில மாணவர்கள் நலனைக் காக்க நாங்களே இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
முதல்வர் ஜெயலலிதா:
இந்த சட்டத் திருத்தத்தால் கிராமப் புற மாணவர்களின் நலன் காக்கப்படும் என்றார்.
இதையடுத்து நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications