மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக...
சென்னை:
சென்னை மாநகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, குடியரசு தினத்தையொட்டி அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியேற்றிவைத்தார்.
குடியரசு தினம் வியாழக்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும்கொடியேற்றும் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன.அந்த வகையில் சென்னை மாநகராட்சி வளாகத்திலும் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சியில் தற்போது மேயர் பதவி காலியாக உள்ளது. துணை மேயர் கராத்தே தியாகராஜனோ போலீசுக்கும்அரசுக்கும் பயந்து தலைமறைவாக இருக்கிறார்.
இதனால் மாநகராட்சியில் யார் இந்த முறை கொடியேற்றுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. மாநகராட்சி ஆணையர்விஜய்குமாரையோ அல்லது மாநகராட்சி மன்றத்தின் அதிமுக தலைவரையோ விட்டு கொடியேற்றலாமா என்றுஆலோசிக்கப்பட்டது.
மரபுப்படி அதெல்லாம் சரிப்பட்டு வராது எனத் தெரியவந்ததால், உள்ளாட்சித் துறை அமைச்சரே கொடியேற்றட்டும் எனமுடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டட வளாகத்தில்தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கொடியேற்றும் நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ், மதிக உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள்புறக்கணித்தனர்.
சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவரை அமைச்சர்கள் யாரும் கொடியேற்றியதே இல்லை. அந்த வகையில் புதிய வரலாறுபடைத்து விட்டது சென்னை மாநகராட்சி.
அதிமுக ஆட்சியில் எல்லாமே வரலாறு தான் போங்க...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications