கூட போட்டு கொடுங்க: இளங்கோவன்
ஈரோடு:
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை திமுக ஒதுக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகத்துறை இணைஅமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 1980ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவும்,காங்கிரஸும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட்டன. அதற்குப் பிறகு அந்த நிலைமை மாறி விட்டது. கடந்தநாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு மிகவும் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டன.
ஆனால் வருகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும். எத்தனை இடங்கள் என்பதைசோனியா காந்தியும், கருணாநிதியும் இறுதி செய்வார்கள். காங்கிரஸ் கட்சி முன்பு போல இல்லை, நன்கு வலுவடைந்துள்ளது.
காமராஜர் ஆட்சி என்பது எங்களது லட்சியம். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நிச்சயம் அமையும்.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்து வரும் சலுகைகள், திட்டங்கள் தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்படுபவை. அதை மக்கள்நம்ப மாட்டார்கள், ஏமாற மாட்டார்கள் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications