கருணாநிதிக்கு வைகோ போடும் நிபந்தனை
சென்னை:
மதிமுகவு டன் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வைகோவையும் என்னையும் பிரிக்க உளவுப் பிரிவு போலீஸார்செய்யும் முயற்சிகள் பலிக்காது, திமுக கூட்டணியில் மதிமுக தொடருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என மதிமுக இரண்டாம் மட்டத் தலைவர்கள் பேசி வருகின்றனர். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் ஆசியுடன் தான் அவர்கள் இவ்வாறு பேசி வருவதாக திமுக கருதுகிறது.கூட்டணியில் அதிக இடங்களை வாங்கவே இந்த பிரஷ்ஷர் டேக்டிஸை வைகோ பயன்படுத்துவதாகக் கருதும் கருணாநிதிநேற்று வைகோவை வரவழைத்துப் பேசினார். பேச்சு நடத்த வைகோவாக வரவில்லை என்றும் கருணாநிதி கூப்பிட்டுத்தான்வந்தார் என்றும் கூறுகின்றனர்.
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இந்தச் சந்திப்பு நீடித்தது.
இச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் என்று எதுவும் இல்லை. சென்னையில் நடந்த வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில், ஓபாசிட்டிவ் வகை ரத்தம் பற்றி வைகோ பேசியதாக செய்திகள் வந்தன. அது பல்வேறு அர்த்தங்களில் பத்திரிகைகளில் வெளியாகிஇருந்தது. (மதிமுக ஓ பாசிட்டிவ் மாதிரி.. யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேரும்)
இதையடுத்து என்னை சந்தித்த வைகோ, தான் பேசிய அர்த்தத்தை தவறாக பத்திரக்கைகளில் வெளியிட்டு விட்டார்கள் என்றார். ஓபாசிட்டிவ் ரத்தம் குறித்து தான் முன்பிருந்தே பேசி வருவதாகவும், இப்போது தேர்தல் காலம் என்பதால் தவறான பொருளில் அதுபிரசுரமாகி விட்டதாகவும் விளக்கினார்.
மதிமுக, திமுக கூட்டணியிலிருந்து விலகி விடும் என்பது தமிழக உளவுத்துறை போலீஸார் கிளப்பி விடும் வதந்தியாகும். அந்தவதந்திக்கும், வைகோவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் இருவரும் இனிமேல் சந்திக்கவே மாட்டோம் என்று சிலகாவல்துறை அதிகாரிகள் நினைத்திருந்தார்கள்.
இன்றைய எங்களின் சந்திப்பு, அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததாக கேள்விப்பட்டேன்.
வைகோ வழக்கம் போல திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறார். அவருடனான கூட்டணி எப்போதும் போல் தொடருகிறதுஎன்றார்கருணாநிதி.
ஆனால், இச் சந்திப்புக்குப் பின் வைகோ ஏதும் பேட்டி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியைச் சந்தித்த வைகோதனது கட்சிக்கு பாமகவுக்கு இணையான இடங்கள் வேண்டும் என்று கோரியதாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் எந்தக் கட்டத்திலும்ஸ்டாலினை முதல்வர் பதவிக்கு முன் நிறுத்தக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
பாமகவுக்கு இணையான இடங்கள் இல்லாவிட்டாலும் மதிமுகவுக்கு 21 இடங்கள் வரை தரப்படும் என கருணாநிதிஉறுதியளித்ததாகவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications