சென்னையில் மினி பஸ்களுக்கு தடை இல்லை
சென்னை:
சென்னையில் மினி பஸ்களை இயக்க விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
தமிழகம் முழுவதும், சென்னை உள்பட, நகர்ப் பகுதிகளையும் கிராமப் பகுதிகளையும் இணைக்க தனியார் மினி பஸ்கள்அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னையிலும் 500 மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி தந்தது.ஆனால், இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியும், மின் பஸ்களுக்குத் தடை கோரியும்தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னையில் மினி பஸ்களை இயக்க இடைக்காலத் தடைவிதித்தது. இந்தத் தடையை விதித்த நீதிபதி தினகர், வழக்கை மேல் விசாரணைக்காக டிவிசன் பெஞ்சுக்கு மாற்றினார்.
இதையடுத்து தலைமை நீதிபதி ஷா, நீதிபதி பிரபா ஆகியோர் கொண்ட பெஞ்ச் இதனை விசாரித்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோது, மினி பஸ்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீலகிரி தவிர தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் மினி பஸ்களை இயக்கத் தடை இல்லை என நீதிபதிகள் அறிவித்தனர். இந்த வழக்கில்இறுதித் தீர்ப்பை வரும் மார்ச் 2ம் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications