திடுக் தகவல் வெளியிடுவேன்: கேப்டன் மிரட்டல்
பரமக்குடி:
திமுகவினர் என்னை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல திடுக்கிடும் தகவல்களை நான் வெளியிடநேரிடும் என்று தேசிய ற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் மிரட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,சட்டசபைத் தேர்லில் நான் தனியாகத்தான் போட்டியிடப் போகிறேன். யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன்.போராடினால்தான் வெற்றி கிடைக்கும். எனக்கு அடுத்தவர்களிடம் அடிமையாக இருக்கப் பிடிக்காது.
கருத்துக்கணிப்பில் எனக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இது சந்தோஷமாகத்தான் உள்ளது. இருந்தாலும் பெரும்பாலானமக்களான பெண்களிடம் கருத்துக் கணிப்பு சரிவர நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால் நிலையே வேறுமாதிரியாகியிருக்கும்.
திமுக தலைவர் உள்பட திமுகவினர் என்னைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கருணாநிதியைப் பொறுத்தவரை வேறுயாரும் கட்சி ஆரம்பிக்கக் கூடாது, அவரது குடும்பத்திற்கு ஆமாம் சாமி போடுபவர்கள்தான் நல்லவர், தன்னைப்பகைத்தவர்களை பழிவாங்காமல் விட மாட்டார்.
இதை நான் சொல்லவில்லை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரே. சொல்லியுள்ளார்.
இதை நான் எடுத்துச் சொன்னால் கோபப்பட்டு தனது பத்திரிக்கையில் என்னை கடுமையாக விமர்சித்து எழுதுகிறார். என்னைஒரு சக்திதான் அரசியலுக்கு இழுத்து வந்தது. இதைச் சொன்னால் ஜோசியத்தை நம்பி விஜயகாந்த் அரசியல் செய்கிறார் என்றுகூறுகிறார்கள்.
அப்படியென்றால், திருச்சி மாநாட்டுக்காக திமுகவினர் சிறப்பு பூஜை செய்தார்களே, அது எதற்காக என்று விளக்க முடியுமா?இனியும் என்னைப் பற்றி விமர்சித்து வந்தால் பிறகு நான் சும்மா இருக்க மாட்டேன். இதுபோல பல திடுக்கிடும் தகவல்களைவெளியிட நேரிடும் என்றார் விஜயகாந்த்.
அது என்ன மாயமோ தெரியலை... திமுகவையும் பாமகவையும் போட்டுத் தாக்கி வரும் விஜய்காந்த் அதிமுக பற்றி வாயேதிறப்பதில்லை..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications