பசுமை நிறைந்த நினைவுகளே... சட்டசபையில் கண்ணீருடன் விடைபெற்ற எம்எல்ஏக்கள்
சென்னை:
கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நட்புடன் பழகி வந்த எம்.எல்.ஏக்கள் நேற்று நடந்த கடைசிக் கூட்டத் தொடருக்குப் பின்னர்கட்டிப்பிடித்து, கை குலுக்கி, கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றுச் சென்றனர்.
ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியின் கடைசி கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது.ஐந்து வருடங்களாக வாதம், பிரதிவாதிம், கூக்குரல், வெளிநடப்பு, ஆவேச கோஷம், தள்ளுமுள்ளு என விதம் விதமானஅனுபவங்களை சந்தித்திருந்தபோதிலும், அதையும் தாண்டி, கட்சி பாகுபாடின்றி நண்பர்களாகப் பழகிய எம்.எல்.ஏக்கள்இனிமேல் சந்திக்க முடியுமா என்ற ஏக்கத்தில் சட்டசபை வளாகத்தில் உலவியதைப் பார்க்க முடிந்தது.
நண்பர்கள் போல பழகி வந்த எம்.எல்.ஏக்கள் பிரியப் போகிறோமே என்ற சோகத்தில் தங்களது நண்பர்களுக்கு டிபன் வாங்கிக்கொடுத்தும், கல்லூரி மாணவர்களைப் போல ஆட்டோகிராப் வாங்கியும், கட்டிப் பிடித்து, கண்ணீர் மல்கவிடைகொடுத்தவண்ணம் இருந்தனர்.
இதில் அதிமுக பெண் எம்.எல்.ஏக்கள்தான் கலக்கி விட்டனர். அத்தனை பெரும் மொத்தமாக பசுமை (பச்சை இல்லாமலா) கலந்தஆரஞ்சு வண்ணத்தில் சேலை அணிந்து வந்திருந்தனர். அனைவரையும் இந்த பெண் எம்.எல்.ஏக்கள் படை கவர்ந்திழுத்தது.
சட்டசபைக் கூட்டம் முடிவடைந்ததும் முதல்வர் ஜெயலலிதாவின் இருக்கைக்கு சென்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பழனிச்சாமி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஹேமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்து கூறி விடைபெற்றுச் சென்றனர்.
அதேபோல சபாநாயகர் காளிமுத்து, சட்டமன்றச் செயலாளர் ராஜாராம் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை வணங்கிவிடைபெற்றனர்.
அவர்களிடம் ஜெயலலிதா, இப்போது பிரிவோம், மீண்டும் மே மாத இறுதியில் (மீண்டும் வெற்றி பெற்று) சந்திப்போம் என்றுபுன்னகையுடன் கூறி விடைபெற்றார்.
சட்டசபையில் மட்டுமல்லாது, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலும் விருந்துபச்சாரம் அமர்க்களப்பட்டது. பசுமை நிறைந்தநினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே என்று பாடாத குறையாக எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்றது கல்லூரி சூழலைநினைவுபடுத்தியது.
ஆனால், அதிமுகவினர் அளவுக்கு திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் இடையே இந்த அளவுக்கு செண்டிமென்ட்எல்லாம் காணப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications