சீட் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்: ஜெ
சென்னை:
தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 1ம்தேதி முதல் விண்ணப்பங்களை அளிக்கலாம் என முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான கவலையில் திமுக கூட்டணியினர் மூழ்கியுள்ள நிலையில் வழக்கம் போலஜெயலலிதா அனைவரையும் முந்திக் கொண்டு தேர்தல் பணிகளில் குதித்துள்ளார்.தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகம், கேரளா மற்றும் புதுவை மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும்அதிமுகவினர், அனைத்துத் தொகுதிகளுக்கும் விண்ணப்பம் அளிக்கலாம்.
பிப்ரவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுஅங்கேயே கொடுக்கலாம்.
பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்களைக் கொடுக்கலாம். 15ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பங்களைக் கொடுக்கலாம்.
தலைமை அலுவலகத்தில் வழங்கப்படுகிற படிவங்களில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
விண்ணப்ப கட்டணம் ரூ. 10,000:
இந் நிலையில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில்,
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், விண்ணப்பத்துடன் ரூ. 10,000 செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். கேரளா மற்றும் புதுவை தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க விரும்புவோர் தலா ரூ. 1,000 செலுத்த வேண்டும்என்று கூறியுள்ளார்.
நத்தம் விஸ்வநாதனுக்கு புது பொறுப்பு:
இதற்கிடையே, போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு புதிய பொறுப்பை முதல்வர் ஜெயலலிதாகொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,அதிமுக தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழகத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்துசெயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் பிரிவுத் தலைவராக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications