எனக்கொரு தாய் இருக்கின்றார்.. ஜெ குறித்து காளிமுத்து
சென்னை:
சட்டமன்றத்தில் கடைசிக் கூட்டத் தொடரில் கடைசியாகப் பேசிய காளிமுத்து முதல்வர் ஜெயலலிதாவை வெகுவாகப்பாராட்டினார்.
காளிமுத்து பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இப்போது வெளியிட்ட அறிவிப்புகள் தேர்தல் கால அறிவிப்புகள் அல்ல. மக்கள்நலனுக்கான அறிவிப்புகள்.
வரும் மே மாத இறுதியிலிருந்து இந்த அறிவிப்புகள் மீண்டும் தொடங்கும் (அதாவது மீண்டும் ஆட்சி அமைத்து) என்பதைஇப்போது தெரிவித்துக் கொள்கிறேன். (அதிமுகவினர் மேஜைகளைத் தட்டி வரவேற்பு)
20 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஐயால் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது, நான் பதவி விலக நேரிடும் என்றுசெய்திகள் வெளியானபோது, சட்டசபையில் எழுந்து நின்று, சபாநாயகர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, எனவே அவர்பதவி விலகத் தேவையில்லை என்று முதல்வர் கூறியதை நான் என் வாழ்நாளில் பெற்ற நற்சாட்சிப் பத்திரமாக கருதுகிறேன்.இதை எனது வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன்.
எனக்கொரு தாய் இருக்கின்றார்.. என்னை அவர் காக்கின்றார் என்ற எம்ஜிஆரின் பாடலை சுட்டிக் காட்டி பேசியபோதுஉணர்ச்சிவசப்பட்டிருந்தார் காளிமுத்து.
மேலும் அவர் பேசுகையில், இந்த அவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சில நேரங்களில் கோபத்தோடு சில வெறுப்புவார்த்தைகளை வெளியிடும் சூழல் எல்லாம் ஏற்பட்டது. அந்த வெறுப்பை நான் எட்டிக் காய் கசப்பாக கருதாமல், நன்மைபயக்கும் வேப்பங்காய் கசப்பாகவே கருதுகிறேன் என்றார்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சில எதிர்க் கட்சி வரிசை உறுப்பினர்களின் பெயர்களையும் சுட்டிக்காட்டி அவர்களது ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் காளிமுத்து.
பின்னர் வெளியே வந்த காளிமுத்துவிடம், அதிமுக அவைத் தலைவராக பொறுப்பேற்கப் போகிறீர்களாமே என்று செய்தியாளர்கள்கேட்டபோது, கட்சித் தலைமைதான் அதுகுறித்து முடிவெடுக்க முடியும். கட்சித் தலைமை உத்தரவிட்டால் தலையைக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications