உச்சநீதிமன்ற கண்டனம்: ஜெ பதவி விலக கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்தில் 42 பேர் பலியானதற்கு தமிழக அரசே பொறுப்பு என உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாககூறியுள்ள நிலையில் அதற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நகர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் தனசேகரனை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், நவ்லேகர் ஆகியோர் அரசின் அலட்சியமான போக்கே இந்தசம்பவம் நடக்கக் காரணம் என்று தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பழியை தனசேகரன் உள்ளிட்டவர்கள் மீது போட்டுவிட்டு தமிழக அரசு தப்ப முயல்வதாகவும் கடுமையாக கருத்துதெரிவித்துள்ளனர்.

இதையடுத்து திமுக தலைவர் கருணாநதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புடையதாகும். இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்தமிழக அரசின் மீது கண்டனம் தெரிவித்து தெளிவாக தீர்ப்பளித்த பிறகும் ஜெயலலிதா தன்னுடைய பதவியில் இருக்கஎந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.

ஜனநாயகப் படுகொலைக்கு பீகார் ஆளுநர்தான் காரணம் என உச்ச நீதிமன்றம் உரைத்ததை மதித்து, ஆளுநர் தனது பதவியைராஜினாமா செய்தார். அதன் மூலம் தனது கெளரவத்தையும், ஜனநாயக பாரம்பரியத்தையும் சிறப்பாக எடுத்து வழிகாட்டியுள்ளபூட்டாசிங் வழியைப் பின்பற்றுவதுதான் ஜெயலலிதாவுக்கு அழகு.

அதே போல பொய் வழத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள தனசேகரனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+