இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: குமரியில் கடல் கொந்தளிப்பு-கல்பாக்கத்தில் உள்வாங்கியது
நாகர்கோவில்:
இந்தோனேசியாவின் கடல் பகுதியில் நேற்றிரவு மிக பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது.
பாண்டா கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 என்ற அளவுக்குப் பதிவானது.இந் நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மிகக் கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே கல்பாக்கத்திலும்கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது.
இந்தோனேசியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நேற்று இரவு 10.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் அம்போன்உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் கீறல் விழுந்தது. மக்கள் அலறியபடி வீடுகளை விட்டும், கடல் பகுதியை விட்டும் ஓடினர்.கடலுக்கடியில் 340 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆனால், அங்கு உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நில நடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகவில்லை என்றும்அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.
ஆனால், இந் நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று காலை முதல் மிகக் கடும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது.நேரம் ஆக ஆக கொந்தளிப்பும் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதால் காலை 10 மணியிலிருந்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்குபடகு சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
விவேகானந்தர் பாறைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் பத்திரமாக கரைக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். இதேபோல திருவள்ளுவர்சிலை நடை மண்டபத்தில் சிக்கியுள்ள பயணிகளை 4, 4 பேராக மீட்கப்பட்டு வருகிறார்கள்.
கடல் கொந்தளிப்பு கடுமையாக இருப்பதால், சுனாமி வருமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.
இதேபோல, கல்பாக்கத்திலும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. கடல் 30 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கியுள்ளது. இதன்காரணமாக கல்பாக்கம் பகுதி மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications