சட்டசபைத் தேர்தலில் வைகோ போட்டி?
நாகர்கோவில்:
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதை அவரேசூசகமாகத் தெரிவித்தார்.
இதுவரை வைகோ ராஜ்யசபா, லோக் சபா எம்பியாகவே இருந்து வந்திருக்கிறார். சொந்த ஊரில் பஞ்சாயத்துத் தலைவராக தனதுஅரசியல் வாழ்வை ஆரம்பித்த வைகோ நெடுங்காலமாக திமுகவின் ராஜ்யசபா எம்பியாகவே இருந்து வந்தார். தனிக் கட்சிதொடங்கிய பிறகும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை.இந் நிலையில் இனிமேல் மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ள வைகோ, கடந்த மக்களவைத் தேர்தலில்போட்டியிடவில்லை. தனது சிவகாசி தொகுதியை ரவிச்சந்திரனுக்கு ஒதுக்கிவிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடஅவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசியவைகோவிடம், நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று உங்கள் கட்சி விரும்புகிறதே, போட்டியிடுவீர்களா? என்றுகேட்டதற்கு,
அவர்களுக்கு எது நல்லதோ அதைச் செய்வேன் என்று பதிலளித்தார்.
திமுக கூட்டணியில் தான் மதிமுக உள்ளதா என்ற கேள்விக்கு, திமுக கூட்டணியில் தான் மதிமுக நீடிக்கிறது. இதை எல்லாகூட்டங்களிலும் தெரிவிக்கிறேன் என்றார்.
மதிமுக விஐபிக்கள் நாஞ்சில் சம்பத், எல்.கணேசன் ஆகியோரின் பேச்சுக்கள் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகஉள்ளதே என்று கேட்டபோது,
கணேசன், நாஞ்சில் சம்பத் போன்றோர் சுதந்திரமான சிந்தனையாளர்கள், அவர்களது பேச்சில் இருந்து வெறும் தலையையும்,வாலையும் எடுத்துக் கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் அவர்களது ஒட்டுமொத்த பேச்சையும் பார்க்க வேண்டும் என்றார்வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications