நான் என்ன ஜெவுக்கு பயந்தவனா? விஜய்காந்த் கேள்வி- போலீஸ் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:

திமுகவை தினமும் எப்போதாவது அதிமுகவையும் தாக்கிப் பேசி வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் அக்கட்சிநிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது பரமகுடி போலீசார் திடீரென வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பரமக்குடி நகரின் முக்கியப் பகுதியான ஐந்து முனை சந்திப்பில் வேனில் இருந்தபடியே 45 நிமிடம் தேர்தல் பிரசாரம் செய்தார்விஜயகாந்த். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

இந் நிலையில், இது குறித்து பரமக்குடி நகர் காவல்துறை எஸ்பி மணியின் உத்தரவின் பேரில் எஸ்.ஐ. அமுதசெல்வி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதன்படி விஜயகாந்த், மாவட்டத் தலைவர் தாஜீதீன், மாவட்டச் செயலர் ஓவியர் சரவணன், நகரத் தலைவர் பொன்னையாஉள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

திமுக, அதிமுக மீது தாக்கு:

இதற்கிடையே ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜயகாந்த், தமிழகத்தில் திமுகவோ, அதிமுகவோ ஆட்சிக்குவந்தால் லஞ்சமும், ஊழலும் ஓயாது என்றார்.

பொதுக் கூட்டங்களில் அவர் பேசுகையில், தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் திமுகவினரும், அதிமுகவினரும்,மாறி,மாறி ஊழல் புகார் சொல்லி வருகின்றனர். இருவருமே ஊழல் புரிகின்றவர்கள் என்பதில் இதைவிட ஆதாரம் வேண்டுமா?

தேர்தலில் இந்த இரு பெரும் கட்சிகளை எதிர்த்து மக்களை சொத்தாக பாவித்து போட்டியிட உள்ளேன். மிகவும் பின் தங்கியராமநாதபுர மாவட்டம் இதுவரையுள்ள ஆட்சிகளில் முன்னேறி உள்ளதா? அரசியல்வாதிகள் தான் நன்றாக முன்னேறியுள்ளனர்.

ஒரு நடிகர் என்னைப் பற்றி சட்டசபைக்கு போகாதவர் என்று கூறுகிறார் என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. சட்டசபைக்குஎம்ஜிஆரும் போகவில்லை, ஜெயலலிதாவும் கூடத்தான் போகவில்லை என்கிறார். என்னைப்பற்றி கூறுபவர் ஜெயலலிதாவை ஏன்கூறவில்லை என்று கேட்கிறார்.

ஜெயலலிதாவைப் பற்றி கூற எனக்கு என்ன பயமா? முதல்வராக ஜெயலலிதா இருந்த போது முதல்வராக இல்லாத கருணாநிதிக்குவிழா எடுத்து புகழ் சேர்த்தவன் நான். நடிகர்கள் கூட பலர் இந்த விழாவிற்கு வர பயந்தனர். என்னைப் பற்றி கருணாநிதிவிமர்சிக்கலாமா?

தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணியில்லை. மக்களுடன் தான் எனது கூட்டணி என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+