பாமகவுக்கு ஆதரவு இல்லை: வன்னியர் சங்கங்கள் அறிவிப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை. பாமக இடம் பெறும் அணிக்கும் எங்களதுஆதரவு இல்லை என்று வன்னியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வன்னியர் சங்கம், தமிழ் பாமக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வன்னியர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில்நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்குத் தலைமை வகித்த வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் கூறுகையில், தனது குடும்ப வளத்திற்காகவும்,மேம்பாட்டுக்காகவும் வன்னிய சமுதாயத்தைப் பயன்படுத்திக் கொண்டவர் ராமதாஸ்.
எனவே பாமகவுக்கும், ராமதாஸுக்கும் நமது ஆதரவு எப்போதும் கிடையாது. அதே போல, பாமக இடம் பெறும் அணிக்கும்நமது ஆதரவை தர மாட்டோம்.
வன்னியர் நில வாரியம் ஒன்றை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதன் மூலம் வன்னியர்களின் கோடிக்கணக்கானசொத்துக்கள் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.
திண்டிவனம் ராமமூர்த்தி பேசுகையில், சிறப்பு அழைப்பாளராக என்னைக் கூப்பிட்டார்கள். நானும் வந்தேன். மற்ற படி இங்குஎடுக்கப்பட்டமுடிவுகள் அவர்களைச் சார்ந்தவை.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமாக உள்ள வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் வன்னியர்களைஓரம் கட்டியே வைத்துள்ளனர். வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை, மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திலும் கூறி விட்டேன். ஆனால் இதுவரை அதற்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனக்குசமாதானம் மட்டுமே கிடைத்தது.
இருந்தாலும் எனது முயற்சிகளை நான் கைவிட மாட்டேன். வன்னிய சமூகத்திற்கு உரிய பரிகாரம் கிடைக்கும் வரை போராடப்போகிறேன். வன்னியர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கு கருணாநிதி தான் பொறுப் பேற்க வேண்டும்.
ஜி.கே.வாசனுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் தமிழகத்திலிருந்து அமைச்சராகியுள்ள காங்கிரஸ்காரர்களின் எண்ணிக்கை3 ஆக உயர்ந்துள்ளது என்று கூறிக் கொள்ளலாம்.
அதே சமயம், திமுக அமைச்சர்களின் எண்ணிக்கை 7லிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்றார்திண்டிவனம் ராமமூர்த்தி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications