தேர்தல் சீட்: விண்ணப்பங்களை வரவேற்கும் கேப்டன்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் சீட் கோரி ரூ. 10,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனநடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் சீட் கோரி ரூ.10,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம்தேர்தல் டிக்கெட் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம், புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும்கழகத் தொண்டர்களிடமிருந்து, அனைத்து சட்டசபைத் தொகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள கட்சித் தலைமைக் கழகத்தில் பிப்ரவரி 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுவழங்கலாம். தலைமைக் கழகத்தில் வழங்கப்படுகிற விண்ணப்பங்களில் தான் விண்ணப்பிக்க வேண்டும்.
234 தொகுதிகளில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்கள் ரூ. 10,000 கட்டணம் செலுத்தியும், தனித்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ. 5000 கட்டியும், புதுவையில் போட்டியிட விரும்புவோர் ரூ. 2000 செலுத்தியும்விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications