உசிலம்பட்டியில் கார்த்திக்-சந்தானம் மோதல்?
சென்னை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் கார்த்திக் திமுக கூட்டணியின் சார்பில் உசிலம்பட்டியில் போட்டியிடக் கூடும் என்றுதெரிகிறது. அப்படிப்பட்ட நிலையில் அதிமுகவின் சார்பில் அவரை எதிர்த்து தமிழக பார்வர்ட் பிளாக் தலைவர் சந்தானத்தைநிறுத்த முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தேசிய அளவில் பிஸ்வாஸ் தலைமையில் உள்ள பார்வர்ட் பிளாக் கட்சி தமிழகத்தைப் பொறுத்தவரை இதுநாள் வரை சந்தானம்எம்எல்ஏ கட்டுப்பாட்டில் இருந்தது. ஜெயிக்கும்போது பார்வர்ட் பிளாக் எம்எல்ஏவாக இருந்தாலும் வென்ற பின் அதிமுகஎம்எல்ஏவாகவே மாறி ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிப்பது சந்தானத்தின் வழக்கமாக இருந்து வந்தது.இந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடித்து தனக்கு ஒரு சீட்டை வழக்கம்போல் வாங்கிவிடும் முடிவில் இருந்தார்.
ஆனால், அதிமுகவின் கட்டுப்பாட்டில் பார்வர்ட் பிளாக் இருப்பதை அதன் தேசியத் தலைவரான பிஸ்வாஸ் விரும்பவில்லை.சந்தானத்துக்கு நல்ல மாற்று தேடி வந்த அவருக்கு கார்த்திக் குறித்து தெரியவந்தது. தனிக் கட்சி இருந்த கார்த்திக்கைக் கூப்பிட்டுபார்வர்ட் பிளாக்கின் தமிழகத் தலைராக்கிவிட்டார் பிஸ்வாஸ்.
இது சந்தானத்துக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. முதலில் அதிமுகவில் அதிமுகவில் ஐக்கியமாக முயன்று தோற்ற கார்த்திக்,பின்னர் தனிக் கட்சி என்று பேசி இப்போது பார்வர்ட் பிளாக் தலைவராகிவிட்டார். ஆனாலும் வழக்கம்போல் அதிமுகவுடன்கூட்டணி வைக்கவே கார்த்திக் விரும்பியதாகத் தெரிகிறது.
தொடக்கத்தில் கார்த்திக்கும் அதிமுகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். அவருடன் காமெடி செந்திலும் ஒட்டிக் கொண்டு அதிமுககூட்டணியில் பார்வர்ட் ப்ளாக் சேரும் என்று சூசகமாக தெரிவித்தார். சசிகலா மூலமாக அதிமுக கூட்டணி அமைக்க கார்த்திக்திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அதை பிஸ்வாஸ் விரும்பவில்லை. சமீபத்தில் சென்னைக்கு வந்தவர் கார்த்திக்கையும் கையோடு அழைத்துக் கொண்டுதிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அப்போது திமுக கூட்டணியில் சேர விரும்புவதாகவும் கார்த்திக்குக்கு ஒரு சீட்தருமாறும் கருணாநிதியிடம் பிஸ்வாஸ் கோரியதாகத் தெரிகிறது.
இதை கருணாநிதியும் ஏற்கத் தயாராக உள்ளார். இதையடுத்து சந்தானம் பிரிவினர் பார்வர்ட் பிளாக்கில் இருந்து விலகவும்அதிமுகவுடன் தனியாக கூட்டணி வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால் பிஸ்வாஸ் தலைமையிலான பார்வர்ட் பிளாக்கார்த்திக், சந்தானம் என்று 2 பிரிவுகளாக உடையும் அபாயத்தில் உள்ளது.
வழக்கமாகவே பார்வர்ட் பிளாக் தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் அதிமுக அனுதாபிகள் தான். இதனால் திமுககூட்டணிக்குப் போக கார்த்திக்கு அச்சாமாகவே உள்ளது. ஆனாலும் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அவர் கட்டுப்படுவார்என்று தெரிகிறது.
திமுக கூட்டணியில் கார்த்திக்குக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில்கார்த்திக்கை எதிர்த்து சந்தானத்தை அதிமுக நிறுத்தும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications