இன்று மகாத்மாவின் 59வது நினைவு தினம்
சென்னை:
மகாத்மா காந்தியின் நினைவு நாள் தியாகிகள் தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று மகாத்மாவின் 59வது நினைவு தினமாகும்.
இந்த நாளையொட்டி இன்று காலை 11 மணிக்கு (இதே நேரத்தில்தான் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்) தமிழகம் முழுவதும் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.முன்னதாக இந்த தினத்தையொட்டி 11 மணிக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதுதொடர்பாக தமிழக அரசு உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
இந்த ஆண்டும் வழக்கம் போல் காலை 11 மணி முதல் 11.02 மணி வரை தியாகிகளுக்கான மெளன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மெளன அஞ்சலி செலுத்தும் நேரத்தை அறிவிக்கும் விதமாக 11 மணிக்கு சங்கொலி எழுப்பப்படும். சங்கொலி கேட்டவுடன் அனைத்து மக்களும் தங்கள் பணிகளை நிறுத்தி விட்டு 2 நிமிட நேரம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்த வேண்டும்.
வானொலி ஒலிபரப்பு, சாலைப் போக்குவரத்து ஆகியவையும் 2 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும். அதேபோல 11 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானங்கள், கப்பல் ஆகியவையும் 11.02க்குப் புறப்படும். ரெயில்களும் 11 மணிக்கு நிறுத்தப்படும் என்று கூறியிருந்தார் பவன் ரெய்னா.
அதன்படி வானொலியில் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. போக்குவரத்து சிக்னல்கள் ஆப் செய்யப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
தலைவர்கள் அஞ்சலி:
காந்தியின் நினைவு நாளையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுனர் பர்னாலா, அமைச்சர்கள், பல்துறைப் பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications