சென்னையில் விரைவில் தலைநகர் தமிழ் சங்கம்: ராமதாஸ்
வண்டலூர்:
தலைநகர் தமிழ் சங்கத்தை சென்னையில் விரைவில் தொடங்குவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் உள்ள செந்தில் நகரில் தலைநகர் தமிழ் சங்கத்தின் தலைமை அலுவலக கட்டட அடிக்கல்நாட்டு விழா நடந்தது.விழாவில் ராமதாஸ் தமிழ் சங்க கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:
தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் தலைமை அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த வண்டலூரில் அமைவது எனக்குவருத்தமாகத்தான் உள்ளது. இந்த தலைநகர் தமிழ்ச் சங்கத்தை சென்னையில் அமைக்கவும் ஒரு நேரம் வரும். அந்த நேரம்இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் வரும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைநகர் தமிழச் சங்கம் அமைய வேண்டும். அப்போது தான் மொழி வளரும். இப்படி தமிழச்சங்கம் அமைக்க முன் வருபவர்களுக்கு அரசு இலவசமாக நிலம் வழங்க வேண்டும் என்றார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசுகையில்,
தமிழ் வளர்ச்சியில் அக்கறை இல்லாத தமிழ் ஆசிரியர்கள் நமது தமிழ் நாட்டில் பலர் உள்ளனர். இப்படிப் பட்டவர்களின்நோக்கம் தமிழ் மொழி வளர்ப்பதில் இல்லை. அதற்கு மாறாக பள்ளிகளில் குறிப்பிட்ட நேரம் பாடம் எடுப்பது, சம்பளம்வாங்குவது என்று இவர்களின் 50 ஆண்டு தமிழாசிரியர் பணி இப்படியே தான் தொடர்கிறது என்றார்.
மெய்யப்பனார் நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,
பழமையான நூல்களை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். தற்போதுள்ள நவீன காலத்திற்கு ஏற்ப நூலகங்களை நவீனடிஜிட்டல் முறையில் உருவாக்க வேண்டும். தமிழ் நுல்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை. திருக்குறளை ஐ.நா. சபையில் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி வரும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications