கட்சியின் மதிப்பை காப்பது முக்கியம்: வைகோ
சங்கரன்கோவில்:
மதிமுகவின் எதிர்காலத்தையும், நிரந்தர மதிப்பையும், தொண்டர்களின் நலனையும் காப்பதில் நான் கவனமாக உள்ளேன் என்றுஅக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சங்கரன்கோவிலில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு வைகோ அளித்த பதில்:கே. மதிமுகவின் தற்போதைய அரசியல் நிலைபாடு என்ன?
ப. மதிமுக ஏற்கனவே உள்ள நிலைபாட்டில் எந்த மாறுதலும் இல்லை. 2004ம் ஆண்டு சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தபோது இருந்த மதிமுகவின் அதே நிலைபாடு தான் தொடர்கிறது.
கே. மதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் மாற்றுக் கட்சி கூட்டணியை எதிர்பார்ப்பது போல் தெரிகிறதே?
ப. மதிமுகவின் உயிர் சக்தியே தொண்டர்கள் தான். மதிமுகவின் கடுமையான தோல்வியிலும், துன்பத்திலும் தங்களின் நலன் என்றுஎதையும் கருதாது இயக்கத்தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கும் வகையில் தொண்டர்கள் உள்ளார்கள்.
அவர்களின் மனம் பல சந்தர்ப்பங்களில் காயப்பட்டிருக்கிறது. 19 மாத சிறைவாசத்தின் போதும் அவர்கள் உள்ளம் ரத்தக் கண்ணீர்வடித்ததும் உண்மை. மதிமுகவின் கெளரவமான அந்தஸ்தும், மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான்தொண்டர்களின் நோக்கம்.
மேலும் இயக்கத்தின் எதிர்காலத்தையும், நிரந்தர மதிப்பையும் தொண்டர்களின் நலனையும் காப்பதில் நான் கவனமாக உள்ளேன்.
கே. கூட்டணி எதுவாக இருந்தாலும் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள்?
ப. கூட்டணி எதுவாக இருந்தாலும் என்ற வார்த்தையே தவறு.
கே. வரும் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளீர்கள்?
ப. தேர்தலில் நிற்கும் போது உங்களிடம் சொல்கிறேன் என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications