வீரப்பனுக்கு சயனைட்: முத்துலட்சுமி வழக்கு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சயனைட் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாகவும், அவருக்குப் பிரேதப் பரிசோதனை செய்தடாக்டர்கள் அதை மறைத்து தவறான அறிக்கை தந்துள்ளதாகவும், எனவே அந்த டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வீரப்பன் மறைந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அவரது மரணம் குறித்த மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது. வீரப்பன்கொல்லப்பட்டதில் மர்மம் நிலவுவதாகவும், எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அதிரடிப்படைகூடுதல் டிஜிபி விஜயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கனவே முத்துலட்சுமி ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கற்பகவிநாயகம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுவை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
இந் நிலையில் தற்போது புதிதாக ஒரு மனுவை முத்துலட்சுமி தாக்கல் செய்துள்ளார். அதில் வீரப்பனின் உறவினர் பழனிஎன்பவருக்கு அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் ரூ. 7 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் சயனைட்விஷத்தைக் கொடுத்துள்ளார்.
பழனி அந்த விஷத்தை உணவில் கலந்து அதை வீரப்பன் மற்றும் கூட்டாளிகளுக்குக் கொடுத்துள்ளார். இதையடுத்து வீரப்பனும்அவரது கூட்டாளிகளும் இறந்து விட்டனர். அவர்களது இறந்த உடலை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றஅதிரடிப்படையினர் துப்பாக்கிகளால் அதை சுட்டு சல்லடையாக்கியுள்ளனர்.
வீரப்பன் இறந்த பிறகே அவரை அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், வீரப்பன் உடலைப் பிரேதப்பரிசோதனை செய்த டாக்டர்கள், சயனைட் கொடுக்கப்பட்ட விஷயத்தை மறைத்து தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
எனவே அந்த டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் முத்துலட்சுமி.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய் அல்லது புதன்கிழமை நடைபெறும் எனத் தெரிகிறது.
வீரப்பனுக்கு பழனி சயனைட் கொடுத்தது தொடர்பான ஆதாரமும், வீரப்பனுக்குக் கொடுக்கப்பட்ட சயனைட் விஷ பாட்டிலும்முத்துலட்சுமி வசம் சிக்கியிருப்பதாக தகவல்கள் வந்ததை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications