மருமகளை முதல்வராக்க ராமதாஸ் முயற்சி

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

பாண்டிச்சேரியில் தனது மருமகளை முதல்வராக்க பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக நடிகர் ஆனந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எண்டியூரில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார்.

ஆனந்தராஜ் பேசுகையில், சினிமாவில் தான் நான் வில்லன். நிஜ வாழ்க்கையில் கிடையாது. சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த துரைருகன் தான் உண்மையான வில்லன். இக்கூட்டத்தை நடத்த விடாமல்பாமகவினர் கலாட்டா செய்தனர்.

நான் வாழ்க்கையில் பல கலாட்டாக்களை பார்த்தவன். பாமகவால் அதிகம் பாதிக்கப்பட்டவன். பாமகவை தனது குடும்பநலனுக்காக நடத்துகிறார் ராமதாஸ். குடும்பத்திற்காகத் தான் அவர் அரசியல் நடத்துகிறார்.

பாமகவை ராமதாஸ் ஆரம்பித்த புதிதில், எனது குடும்பத்தினரோ, நானே அரசியலில் எந்தப் பதவிக்கும் வர மாட்டோம் என்றார்.அப்படி வந்தால் நடுரோட்டில் கட்டி வைத்து சவுக்கால் அடியுங்கள் என்றும் சவால் விட்டார்.

இப்போது அவரது மகன் மத்திய அமைச்சர். அடுத்து மருமகளை புதுவை மாநில முதல்வராக்க திட்டமிட்டுள்ளார். அதை நான்நடத்த விட மாட்டேன். நான் புதுவையில் தான் இருக்கிறேன். அவர் அங்கு வரட்டும், நான் பார்த்துக் கொள்கிறேன்.

திமுக தலைமையில் உள்ள கூட்டணியை 7 கட்சிக் கூட்டணி என்பதை விட 7 கோட்டான்களின் கூட்டணி என்று கூறுவதுதான்சரியாக இருக்கும். 7 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை எதிர்க்கிறார்கள். சிங்கம் எப்போதுமே தனித்துத்தான் வரும் என்றார்ஆனந்தராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+