மு.மேத்தா, சின்னக்குத்தூசி, ஓவியர் ஜெயராஜுக்கு கலைஞர் விருது
சென்னை:
கவிஞர் மு.மேத்தா, எழுத்தாளர் சின்னக்குத்தூசி, ஓவியர் ஜெயராஜ் ஆகியோருக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர்விருதுகளை திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் 3 பேருக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சம்பொற்கிழி வழங்கப்படுகிறது. 2005ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்தலைமையில் சென்னையில் நடந்தது.
இதில் 3 பேருக்கும் கருணாநிதி விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், முரசொலி மாறனின் கனவு தான் இந்தவிருது. இதை ஆண்டு தோறும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.
விருது பெற்ற 3 பேருக்கும் தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி வழங்கப்படுகிறது. பொற்கிழி என்பது அவர்களுக்குப் பெரிதல்ல.உள்ளம் நிறைந்த பாராட்டும், வாழ்த்தும் தான் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடியவை.
விருது பெற்ற மூன்று பேரின் தொண்டு நமக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கு, எழுச்சிக்குத் தேவைஎன்பதால் தான் சிறப்பு செய்து பாராட்டுகிறோம்.
திரைப்படங்களை தணிக்கை செய்வது எப்படி என்பது எனக்குத் தெரியும். அதாவது படத்தில் ஆபாசமான காட்சி இருந்தால்அதை நீக்கி விடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் கூறுவார்கள். ஆனால் அதே காட்சியை எங்கே மீண்டும் பார்ப்போம் என்றுகூறியே 3 அல்லது நான்கு முறை பார்த்து விடுவார்கள். அதுபோலத் தான் ஓவியர் ஜெயராஜின் படங்களும்.ஜெயராஜின் படங்களில் செக்ஸ் அப்பீல் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதே படத்தைத் தான் திரும்பத்திரும்பப் பார்த்து விமர்சனம் செய்வார்கள். கிட்டத்தட்ட தணிக்கை வாரிய கதை தான் இதுவும். ஆனால் என்றுமே அளவைத்தாண்டியதில்லை ஜெயராஜ்.
மேத்தா நல்ல புதுக் கவிதைக் கலைஞர். புதுக்கவிதைகளை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தியவர். சின்னக்குத்தூசி நல்லஅரசியல் விமர்சகர். புலமை பெற்ற எழுத்தாளர் என்று பாராட்டினார் கருணாநிதி.
முரசொலி அறக்கட்டளையின் தலைவர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர்கள் செ.குப்புசாமி எம்.பி, எஸ்.ஏ.எம்.உசேன் எம்.எல்.ஏ.உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications