குண்டாஸ் ரத்து: திமுக கவுன்சிலர் வழக்கு
சென்னை:
தமிழக அரசு தன்னை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை எம்.ஜி.ஆர்.நகர் கூட்ட நெரிசல் பலி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திமுக கவுன்சிலர் தனசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த கூட்டத்தினரிடையே ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து வதந்தி பரப்பியதாக கூறி திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைவிசாரித்த சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில்தலையிட மறுத்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு அதிகாரிகள் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கடுமையாகதெரிவித்தது.
இந்த நிலையில் தனசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். தற்போது தன் மீது குண்டர் சட்டப்படிநடவடிக்கை எடுத்ததை ரத்து செய்யக் கோரி தனசேகரன் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது சார்பில் இன்று தாக்கல்செய்யப்பட்ட மனுவில், எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்திற்கு அரசு அதிகாரிகளே காரணம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்தெரிவித்துள்ளது.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் தான் என் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. எனவே என்னை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ததை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும் ஜாமீனில் என்னை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications