திமுக போராட்டத்தை எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கே.ஆர்.ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம்அரசினர் விருந்தினர் மாளிகை, மெமோரியல் ஹால் உள்ளிட்ட சில பகுதிகளில் தான் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவைநடத்த வேண்டும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த இடங்களில் மட்டுமே போராட்டங்களை நடத்த வேண்டும். மற்ற இடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது.இந்த நிலையில் கவுன்சிலர் தனசேகரன் வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை வலியுறுத்தி காவல்துறை ஆணையர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது.

காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்,போக்குவரத்து பாதிக்கப்படும், ஆணையர் அலுவலகப் பணிகள் ஸ்தம்பிக்கும். மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைமீறுவதாகவும் இந்த போராட்டம் அமையும்.

எனவே இந்த போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று காலை தலைமைநீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+