குருமூர்த்தி மீதான வழக்கு செல்லாது: உயர்நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் குருமூர்த்தி மீது காஞ்சிபுரம் போலீஸார் தொடுத்துள்ள வழக்கு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக குருமூர்த்தி ஆங்கில நாளிதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். இந்தக்கட்டுரைகள், கொலை வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருப்பதாகவும், விசாரணையை திசை திருப்பும் விதமாக குருமூர்த்திஎழுதி வருவதாகவும், கொலை வழக்கு தொடர்பான தகவல்களை அவர் மறைப்பதாகவும் கூறி காஞ்சிபுரம் போலீஸார்குருமூர்த்தி மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு செல்லாது என்று அறிவிக்கக் கோரி குருமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதி ஜெயபால், போலீஸாரின் குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் இல்லை. எனவே மனுதாரர் மீதானவழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications