வீடியோ கான்பரன்ஸ் மூலம் கரும்பு அரவையைத் தொடங்கி வைக்கும் ஜெ
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கரும்பு அரவைசெவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம்தொடங்கி வைக்கிறார்.அலங்காநல்லூரில் உள்ள தேசிய கரும்பு சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கவில்லை. இந்த நிலையில் ஆலைஇயங்குவதற்குத் தேவையான மானிய உதவியை மாநில அரசு சமீபத்தில் அளித்தது.
இதைத் தொடர்ந்து மீண்டும் ஆலையை இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வந்தன. ஏற்பாடுகள்அனைத்தும் முடிந்துள்ள நிலையில் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆலை மீண்டும் கரும்பு அரவையைத் தொடங்குகிறது.
இதை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications