3 நாடுகளில் கலாம் 10 நாள் சுற்றுப் பயணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவின் கிழக்கை நோக்கி கொள்கையை வலுப்படுத்த ஜனாதிபதி அப்துல் கலாம் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும்கொரியா நாடுகளில் இன்று முதல் 10 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

மேலை நாடுகளுடன் பல்வேறு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தி வரும் இந்தியா, கிழக்கு நாடுகளுடனானஉறவையும் பலப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, கிழக்கை நோக்கி என்ற கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இரு தரப்புஉறவுகளை மேம்படுத்தும் பொருட்டு ஜனாதிபதி அப்துல் கலாம் 10 நாள் சுற்றுப் பயணமாக கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்.

தனது பயணத்தின் முதல் கட்டமாக இன்று சிங்கப்பூருக்கு செல்லும் கலாம் பிப்ரவரி 3ம் தேதி வரை அங்கு இருப்பார். ஆசியான்அமைப்பின் முக்கிய அங்கம் வகித்து வரும் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்துசிங்கப்பூர் தலைவர்களுடன் முக்கிய பேச்சு நடத்துகிறார்.

சிங்கப்பூரில் இருந்து பிலிப்பைன்ஸ் செல்லும் அப்துல் கலாம் பிப்ரவரி 3ம் தேதி முதல் முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை அங்குசுற்றுப் பயணம் மேற்கொள்வார். பிலிப்பைன்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் உரையாற்றுகிறார்.

சுற்றுப் பயணத்தின் இறுதி கட்டமாக தென்கொரியா செல்லும் அப்துல் கலாம் அங்கு பிப்ரவரி 9ம் தேதி வரை இருந்து அங்குள்ளதலைவர்களுடன் பேச்சு நடத்துவார். தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம்என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

தமது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அப்துல் கலாம் பிப்ரவரி 10ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+