தமிழ்நாடு மருத்துவமனையை விற்க தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான சங்கரா மருத்துவமனையை (முன்னாள்தமிழ்நாடு மருத்துவமனை) விற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு மருத்துவமனை என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவமனையை, காஞ்சி சங்கர மடத்திற்குச்சொந்தமான காஞ்சி காமகோடி கல்வி அறக்கட்டளை விலைக்கு வாங்கியது. அதன் பின்னர் இந்த மருத்துவமனையின் பெயர்சங்கரா மருத்துவமனை என மாற்றம் செய்யப்பட்டது.

இந்த மருத்துவமனை பேரிழப்பை சந்தித்து வருவதால் மருத்துவமனையை விற்க சங்கர மடம் முடிவு செய்தது. சங்கரராமன்கொலை வழக்குக்குப் பிறகு, சங்கரமட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு உயர்நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும்என்பதால், சங்கரா மருத்துவமனையை விற்க அனுமதி தருமாறு சங்கர மடம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவில், செட்டிநாடு கல்வி அறக்கட்டளை, சங்கரா மருத்துவமனையை ரூ. 105 கோடிக்கு வாங்க தயாராக இருப்பதாகதெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், அறக்கட்டளை என்பதே சேவை மனப்பான்மையுடன் நடத்தப்பட வேண்டியது. இந்த நிலையில் 105 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு விற்பதையும், லாப நோக்கில் விற்பதையும் அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+