வெடிகுண்டு மிரட்டல்: மத்திய சிறைகளுக்கு பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீவிரவாதிகளின் வெடிகுண்டு மிரட்டலையடுத்து தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளுக்கு கூடுதல் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம்களை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னையிலிருந்து செல்லும் 10ரயில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.இதையடுத்து சென்னை எழும்பூர், சென்டிரல் ஆகிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் ஏராளமான முஸ்லீம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் சிறைகளுக்கும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மத்திய சிறை, பூவிருந்தவல்லி துணைச் சிறை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை, கடலூர்உள்ளிட்ட முக்கிய மத்திய சிறைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கோபுரங்கள் சிறைகளுக்குள்ளும்,வெளியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இரவு பகலாக துப்பாக்கி ஏந்தியபாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications