தேமுதிக தலைவருக்கு அடி, உதை: கோவையில் தொண்டர்கள் மறியல்

Subscribe to Oneindia Tamil

கோயம்பத்தூர்:

கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் பாரதி கணேசனை போலீஸ் இன்ஸ்பெக்டர்தாக்கியதைக் கண்டித்து விஜயகாந்த் கட்சித் தொண்டர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

பாரதிகணேசன், மில்கேட் என்ற இடத்தில் டீக் கடை வைத்துள்ளார். கடைக்குப் பின்புறம் அவரது வீடு உள்ளது. இவரது கடைக்குமுன்பாக இரு கோஷ்டிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது.

சம்பவம் நடந்த சில மணி நேரம் கழித்து செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில் போலீஸார் அங்குவந்துள்ளனர். பாரதி கணேசனிடம் சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர். தனக்கு எதுவும் தெரியாது, இச்சம்பவத்தில் எனக்குஎந்தத் தொடர்பும் கிடையாது என்று பாரதிகணேசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், பாரதிகணேசனை அடித்துள்ளதாக தெரிகிறது. பின்னர்அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சாப்பாடு எதுவும் கொடுக்காமல் நீண்ட நேரம் அமர வைத்துள்ளார்.

இதனால் பாரதி கணேசன் மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனையில் போலீஸார்அனுமதித்து விட்டுச் சென்று விட்டனர்.

இந்தத் தகவல் கோவை மாவட்ட தேமுதிகவினருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்ததொண்டர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் குதித்த மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீஸார்கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+