வைகோ தலைமையை ஏற்கத் தயார்: ஆர்.எம்.வீ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆற்றல் மிக்க தலைவராக திகழும் வைகோவின் வழியில் நடக்க நான் தயார் என்று எம்.ஜி.ஆர். கழக தலைவரும், முன்னாள்அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய காற்றில் விதைத்த கருத்து என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். கவிஞர் வாலி முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆர்.எம்.வீரப்பன் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். அவர் பேசுகையில், ஒருவரது முகம், இனம், குலம் பார்த்துஅவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது. அவர்களது கொள்கை, அதில் அவர்கள் காட்டும் உறுதி ஆகியவற்றைப் பார்த்துத் தான்நட்பு பாராட்ட வேண்டும்.

நல்ல மனதுக்காரர்கள் யாராக இருந்தாலும், தமிழர்களுக்காக பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பின்னால்செல்ல நான் தயார். அப்படிப்பட்ட நல்ல மனிதராக, நல்ல மனதுக்காரராக, ஆற்றல் மிக்க தலைவராக, அண்ணா, எம்.ஜி.ஆரைப்போல சிறப்புடன் திகழ்கிறார் வைகோ என்றார் ஆர்.எம்.வீரப்பன்.

ஆர்.எம்.வீரப்பனின் பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணிக்கு எப்போதுமே ஆர்.எம்.வீ ஆதரவுதெரிவித்து வருகிறார். ஆனால் தேர்தலில் இதுவரை பெரிய அளவில் ஆர்.எம்.வீயின் எம்.ஜி.ஆர். கழகத்திற்கு திமுகவில் சீட்ஒதுக்கப்பட்டதில்லை.

இந்த நிலையில் வைகோவின் தலைமையை ஏற்கத் தயார் என்ற பொருளில் அவர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பலகேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+