பல்லி விழுந்த சாப்பாடு: 300 மாணவர்கள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, பேதியால்பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள்தங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை அவர்கள் காலை உணவு சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து உடனடியாகஅனைவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 17 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் விடுதிக்குத் திரும்பினர்.

மாணவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் பல்லி விழுந்திருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதிக் காப்பாளர்மற்றும் நான்கு சமையல்காரர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+