சென்னையில் தாக்குதல் நடத்த லஷ்கர் திட்டம்
சென்னை:
தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பெரிய அளவில் தாக்குதல்நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா திட்டம் தீட்டியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலையடுத்து மத்திய உளவுப் பிரிவிவான ரா தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. பெங்களூர்த் தாக்குதலில் ஈடுபட்டவன் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்பது ராவிசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து வங்கதேசத் தலைநகர் டாக்கா நகரில் பதுங்கியுள்ள தீவிரவாதியின் ஒயர்லெஸ் பேச்சுக்களை ரா அமைப்புதொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்த நிலையில் டாக்காவில் பதுங்கியுள்ள தீவிரவாதி தனது கூட்டாளிகளுடன் பேசியதை ராஅதிகாரிகள் இடைமறித்துக் கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
அதன் படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய தென்னிந்திய நகரங்களில் பெரிய அளவில் தாக்குதல்நடத்த லஷ்கர் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஹைதராபாத்திலிருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்,குஜராத்திலிருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு மேற்காசிய நாடுகளிலிருந்து ஏராளமான பணம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாகிஸ்தானில் தீவிரஆயுதப் பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் தங்களது தீவிரவாதத் தாக்குதலை மேற்கொள்ளவும்திட்டமிட்டுள்ளதாக அந்தப் பேச்சிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகபட்ச பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு ரா அமைப்பு சம்பந்தப்பட்டமாநில அரசுகளை எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications