மாநகராட்சி: திமுக கவுன்சிலருக்கு அனுமதி
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுககவுன்சிலர் தனசேகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
எம்.ஜி.ஆர் நகர் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர் தனசேகரன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தும் கூட, குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டுள்ளதால் வெளியில் வர முடியாத நிலை உள்ளது.இந்த நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் தாக்கல் செய்துள்ள மனுஇன்று நீதிபதிகள் சதாசிவம், சம்பத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள தனசேகரனை அனுமதிக்க வேண்டும் என்று அவரதுவழக்கறிஞர் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதிகள், வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில்தனசேகரன் பங்கேற்கலாம் என அனுமதி அளித்தனர்.
மேலும், குண்டர் சட்டத்தை எதிர்த்து தனசேகரன் தாக்கல் செய்துள்ள மனு வருகிற 8ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications