சிறுமி கொலை வழக்கு: குஷ்பு வரவில்லை
சென்னை:
சென்னை நட்சத்திர ஹோட்டலில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை மறைத்ததாகதொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நடிகை குஷ்பு வரவில்லை.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி அளித்திருந்தார்.தனக்குத் தெரிந்த குற்றச் செயலை போலீஸாருக்குத் தெரியாமல் மறைத்து விட்ட குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோரி சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கைவருகிற 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே, ஆபாசப் பட விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பு, அவரது கணவர் சுந்தர்.சி, வீட்டு வேலைக்காரர்கள் ஆகியோர்உள்ளிட்ட 15 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அடுத்த கட்டமாக, மும்பைக்குச் சென்று மேக்ஸிம் பத்திரிக்கை பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்ததனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர். இன்றும் புத்தக விற்பனை நிலையங்களில் போலீஸார் தொடர்ந்து சோதனைநடத்தி மேக்ஸிம் பத்திரிக்கையை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications