ஊழியர்கள் ஸ்டிரைக்: விமான சேவைகள் பாதிப்பு
சென்னை:
நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக சென்னை உள்பட நூற்றுக்கும்மேற்பட்ட விமான நிலையங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.இதன் படி இரு விமான நிலையங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரு விமானநிலையங்களின் பராமரிப்புகளையும் தனியார் நிறுவனங்களே இனி மேற்கொள்ளும்.மத்திய அரசின் இந்த முடிவுக்கு இடது சாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசின் இந்தநடவடிக்கையைக் கண்டித்து இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை விமான நிலைய ஊழியர்கள்மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் உள்ள 126 விமான நிலையங்களில் பணிகள் முற்றிலும்பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலுவலகங்களைப் புறக்கணித்து முக்கிய நுழைவாயில்முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில், ஊழியர்கள், அதிகாரிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். வேலை நிறுத்தம்காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றாலும் கூட போராட்டம் நீடித்தால் உள்நாடு மற்றும் வெளிநாட்டுவிமானச் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சரவை இன்று பிற்பகல் அவசரமாக கூடிவிவாதிக்கவுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications