தீவிரவாதத்தை ஒழிக்க கலாமின் 3 அம்சத் திட்டம்
டெல்லி:
உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க 3 அம்சத் திட்டம் ஒன்றை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அப்துல்கலாம். முதலில் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார்.சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு விமானத்தில் தன்னுடன் பயணித்த நிருபர்களுடன் அப்துல் கலாம் பேசினார். அது ஒரு பேட்டிபோல இல்லை, ஆசிரியர், மாணவர்களுக்கு போதனை செய்வது போல மிக அருமையாக அமைந்தது. தான் பேசி முடித்ததும்,அனைத்து நிருபர்களையும் கேள்விகள் கேட்கச் செய்து அவர்களது சந்தேகங்களை போக்கினார் கலாம்.
முன்னதாக அப்துல் கலாம் பேசுகையில், தீவிரவாதம் தலை தூக்குவதற்கு முக்கியக் காரணம் சரித்திரப்பூர்வமான சிக்கல்கள்நீண்ட காலமாக தீர்க்கப்படாதது தான். இன்னொறு முக்கிய காரணம் வறுமை. உலக அளவில் தீவிரவாதம் பெரும்அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
தீவிரவாதத்தை ஒழிக்க 3 அம்சத் திட்டம் ஒன்றை நான் வகுத்துள்ளேன். மதங்களை ஆன்மீக சக்தியாக மாற்றுதல், வறுமை ஒழிப்புமற்றும் பயனுள்ள கல்வித் திட்டம். இந்த மூன்றையும் நாம் கடைப்பிடித்தால் தீவிரவாதம் படிப்படியாக ஒழிந்து விடும்.
வறுமையை ஒழிக்காமல் நாம் எதையும் சாதிக்க டியாது. வறுமை நீடிக்கும் வரை தீவிரவாதம் ஒழியாது. இதற்கு உலகஅளவில் ஒருங்கிணைந்த தீர்வு காணப்பட வேண்டும்.
உலகில் அணு ஆயுத யுத்தம் வெடிக்கும் என்று நான் கருதவில்லை. அது ஒரு அச்சுறுத்தலே அல்ல என்பதும் எனது கருத்து. இன்றுஉலகில் 10,000க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. அது போரைத் தடுக்கும் சக்தியாகவே இப்போது உள்ளது என்றார்அப்துல் கலாம்.
இதற்கிடையே சிங்கப்பூர் சென்றடைந்த அப்துல் கலாக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர்அமைச்சர் லிம்பூங் ஹெங் மற்றும் அதிகாரிகள் கலாமை வரவேற்றனர்.
தனது 3 நாள் சிங்கப்பூர் பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் எஸ்.ஆர். நாதன் மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை கலாம்சந்திக்கிறார்.
பின்னர் 3ம் தேதி அவர் பிலிப்பைன்ஸ் செல்கிறார். 6ம் தேதி வரை அவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். பின்னர் தென்கொரியாசெல்லும் கலாம், 9ம் ததி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.
தென்கொரியாவுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications