திமுக கூட்டணியை ஏற்க மாட்டேன்: சந்தானம்
மதுரை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் பிஸ்வாஸ், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது நம்பிக்கைத் துரோக செயல்.
திமுகவுடன் கூட்டணி வைப்பதை ஏற்க முடியாது என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சந்தானம் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.சமீபத்தில் சென்னை வந்த பார்வர்ட் பிளாக் தலைவர் பிஸ்வாஸ் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினார். அப்போது தமிழக பார்வர்ட் பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக்கும் உடன் இருந்தார். இது பார்வர்ட் பிளாக்வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுரையில் சந்தானம் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியின் கொள்கைக்கு விரோதமானதுஇந்த சந்திப்பு, இதன் மூலம் கட்சியினரின் நம்பிக்கையை பிஸ்வாஸ் கெடுத்து விட்டார்.
பிஸ்வாஸும், கார்த்திக்கும் கட்சியின் விதிமுறைகள், கொள்கை, கோட்பாடுகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். என்னிடம் கூடசொல்லாமல் இருவரும் கருணாநிதியை சந்தித்துள்ளனர்.
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் நான் கட்சியை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து பார்வர்ட் பிளாக்கில் தான்நீடிப்பேன். அதிமுகவுடன் தான் வருகிற சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சியில் உள்ளபெரும்பான்மையான தொண்டர்கள் கருதுகிறார்கள். அவர்களது எண்ணத்திற்கு விரோதமாக கட்சி தலைமை நடந்தால்விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
திமுகவுடன் கூட்டணி வைக்க கட்சி மேலிடம் முடிவு செய்தால் அதை நான் ஏற்க மாட்டேன் என்றார் சந்தானம்.












Click it and Unblock the Notifications