நடிகர் செந்தில் அதிமுகவில் இணைந்தார்
சென்னை:
நடிகர் கார்த்திக்குடன் நெருக்கமாக இருந்து வந்த பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், முதல்வர் ஜெயலலிதாவை நேரில்சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த நடிகர் செந்தில் ஆரம்பம் முதலே தீவிர அதிமுக அனுதாபியாக விளங்கி வந்தார். இருப்பினும்கட்சியில் சேராமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக நடிகர் கார்த்திக்குடன் நெருக்கமாக இருந்தார்.
கார்த்திக் எனக்கு நெருக்கமானவர், அவர் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைப்பார் என்றும்பேட்டி அளித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்திக் திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இதுபார்வர்ட் பிளாக் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பார் என்று முக்குலத்தோர் சமூகத்தினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கார்த்திக்கருணாநிதியை சந்தித்தது அவரது செல்வாக்குக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது யாருடன் கூட்டணி சேருவதுஎன்பதில் கார்த்திக் படு குழப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் செந்தில் இன்று திடீரென முதல்வர் ஜெயலலிதாவை கட்சி அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில்இணைந்தார். அவரிடம் அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.வருகிற தேர்தலில் செந்திலுக்கு டிக்கெட் கிடைக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் அதிமுக பிரச்சாரபீரங்கிகளில் ஒருவராக செந்தில் திகழக் கூடும் என்று தெரிகிறது.
ஏற்கனவே பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகர் ராதாரவி ஆகியோர் அதிமுகவில் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.பதவியை வகித்து வருகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.
இதே போல நடிகர் பாலு ஆனந்த், இயக்குநர் ஜெயப்பிரகாஷ், மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களைச்சேர்ந்த 638 பெண்கள் மற்றும் நூற்றுக்கணக்கான திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக தொண்டர்களும் இன்று ஜெயலலிதாமுன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications