மேட்டூர் அணை நாளை மீண்டும் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி, சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பணப் பயிர்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையை மீண்டும் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி மூடப்பட்டது. இந் நிலையில் திருச்சி, சேலம் மாவட்டங்களில் 15 பாசனக் கால்வாய்களின் மூலமாக சாகுபடி செய்யப்படும் பணப் பயிர்களைக் காக்கவும், காவிரிக் கரையோர பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும் மேட்டூர் அணையைத் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது.

இதை ஏற்று நாளை முதல் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி வரை மேட்டூர் அணையைத் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+