நாளை அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்
சென்னை:
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நாளை (சனிக்கிழமை) வடபழனி விஜய சேஷ மகாலில்நடைபெறுகின்றன.
சட்டசபை தேர்தலையொட்டி நடக்கும் இக் கூட்டங்கள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் கூடுகின்றன.முதலில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளை தேர்தல் பணிகளில் முடக்கி விடுவது பற்றியும்,தேர்தல் வியூகம் மற்றும் பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது.
இதை தொடர்ந்து கூடும் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கிதீர்மானம் நிறைவேற்றப்படும்.
இக் கூட்டத்தில் அதிமுகவின் அவைத் தலைவராக மாஜி சபாநாயகர் காளிமுத்து நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர். கூட்டம்நடைபெறும் விஜய சேஷமகால் மற்றும் அதற்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் அதிமுக கொடிகள் மற்றும் தோரணங்களால்அலங்கரிக்கப்பட்டு களை கட்டுகிறது.












Click it and Unblock the Notifications