எப்ஐஆர்: போலீஸுக்கு தலைமை நீதிபதி சூடு
சென்னை:
போலி எப்ஐஆர் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்க விட நேரிடும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் போலி எப்ஐஆர்கள் தரப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞரும் மோகன்ராஜின் வழக்கறிஞரும் கடுமையாக வாதாடினர். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,
இந்த விவகாரத்தில் போலீஸார் அதிக அளவில் சம்பந்தப்பட்டுள்ளனர். போலீஸாரின் விசாரணையில் நாங்கள் விரக்தி அடைந்துள்ளோம். விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது.
இது (எப்ஐஆர்) என்ன பொழுதுபோக்கு புத்தகமா? நினைத்த இடத்தில் கொடுத்து அடித்துக் கொள்வதற்கு? இந்த வழக்கை சரியான முறையில் விசாரிப்பதாக இருந்தால் சொல்லுங்கள், இல்லாவிட்டால் உங்களுக்கு கஷ்டம் இருக்காது, உங்களது பணியிலிருந்து இந்த வழக்கை விடுவித்து விடுகிறோம், சிபிஐயிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்றார் கோபமாக.
இதைத் தொடர்ந்து போலி எப்.ஐ.ஆரை பயன்படுத்தி விபத்து நடந்ததாக கூறி போலியாக இன்சூரன்ஸ் தொகையைப் பெற்றவர்கள் குறித்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி டிஐஜி மற்றும்
போலி எப்.ஐ.ஆர். தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று இடைக்கால உத்தரவு ஒன்றை நீதிபதிகள் ஏ.பி.ஷா, பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் பிறப்பித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications