நாளை நெய்வேலி, சேலம் வரும் மன்மோகன் சிங்
சேலம்:
நெய்வேலி மற்றும் சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை வருகிறார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் உள்ள அனல் மின் நிலைய (என்.எல்.சி.) பொன் விழா கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் கலந்து கொண்டு பொன் விழாவைத் தொடங்கி வைக்கிறார்.இந் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி வரும் மன்மோகன்சிங் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெய்வேலி செல்கிறார். அங்கு பொன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார்.
அதன் பின்னர் 2வது சுரங்கத்தில் புதிய விரிவாக்கத் திட்டம் மற்றும் 250 மெகாவாட் திறனுள்ள 2 புதிய யூனிட்டுகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டுகிறார்.
நெய்வேலி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சேலம் செல்கிறார் மன்மோகன்சிங். சேலத்திலிருந்து, ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி வரை அமைக்கப்படவுள்ள புதிய நான்கு வழிச் சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமரின் இந்த இரு நிகழ்ச்சிகளையும் ஒட்டி, நெய்வேலி, சேலம், சென்னை, திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் கருவிகள், நிபுணர்கள் இரவு பகலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications